தமிழ்நாடு அரசால் அரசாணை எண்.225, (தொழிலாளர் துறை) நாள்.15.02.1972 –ன்படி குடும்பத்தை ஏழ்மை மற்றும் துன்ப நிலையில் விட்டுவிட்டு பணியிடையே இறந்த அரசு ஊழியர்களின் காவலர்களின் தகுதிவாய்ந்த வாரிசுகளுக்கு இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
2021-22 ஆண்டில் 1480 பேருக்குத் தகவல் பதிவு உதவியாளர், 56பேர் அலுவலக உதவியாளர், 16 பேர் அடிப்படை அரசு பணியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதைத் தவிர 1 இளநிலை உதவியாளர், 1 தட்டச்சர் சிறப்பு நிகழ்வாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்
.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் அரசாணை (நிலை) எண்.203, உள்(காவல் 15) துறை, நாள்:24.02.2022-ன்படி 1132 தகவல் பதிவு உதவியாளர் / காவல் நிலைய வரவேற்பாளர் பணியிடங்கள் புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ளது. 1132 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களை அரசுக்கு ஒப்புவிப்பு செய்து அதற்குப் பதிலாக கருணை அடிப்படையில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள தகுதியுள்ள நபர்களை தகவல் பதிவு உதவியாளர் / காவல் நிலைய வரவேற்பாளர் பதவிக்கு நியமிக்கும் பொருட்டு அரசாணை பெறப்பட்டுள்ளது.
கருணை அடிப்படையிலான இளநிலை உதவியாளர் / தட்டச்சர் காத்திருப்போர் பட்டியலில் உள்ள நபர்களிலிருந்து முதல் கட்டமாக (880 + 32 COVID = 912) நபர்களும் இரண்டாம் கட்டமாக (80+32 COVID = 112) நபர்களும் மற்றும் மூன்றாம் கட்டமாக (48+28 COVID=76) நபர்பகளும் தகவல் பதிவு உதவியாளர்/காவல் நிலைய வரவேற்பாளர் பணியிடம் வழங்கப்பட்டுள்ளது.