Police Welfare

தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதி

  • பணியிலிருக்கும் போது இறக்கும் காவலர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி வழங்க அந்த நிதியம் உருவாக்கப்பட்டது .
  • கோவிட்-19 பாதிப்பினால் இறந்த 124 காவலர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதியாக 30.37 கோடி வழங்கப்பட்டது.

ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகளுக்கான நல வாரியம்

  • அரசாணை எண்.157 உள் (காவல்-9) நாள்.08.03.2019-ன்படி ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகளுக்கான நலவாரியம் ஒன்று உருவாக்கப்படும் என தமிழக அரசால் நிர்வாக ஆணை வெளியிடப்பட்டது.
  • மேற்கண்ட நலவாரியம் அமைப்பது தொடர்பாக மாவட்டம், நகரம் மற்றும் பெருநகரம் அளவில் குழுக்கள் அமைப்பதற்கு அரசிடமிருந்து ஆணை பெறப்பெற்றுள்ளது.

மோர் மற்றும் எலுமிச்சை பழச்சாறு வழங்குதல்

  • போக்குவரத்தை கட்டுப்படுத்தும் காவல்துறையினருக்கு அரசாணை எண்.902, உள்(காவல்.13)துறை, நாள்.14.12.2015-ன்படி கோடைக்காலத்தில் மோர் மற்றும் எலுமிச்சம் பழச்சாறு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • ஒவ்வொரு ஆண்டும் கோடைக் காலத்தில் மார்ச் முதல் ஜீன் வரையிலான நான்கு மாதங்களுக்கு காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை உள்ள நேரத்தில் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மோர் மற்றும் எலுமிச்சம் பழச்சாறு வழங்கப்பட்டு வருகிறது.
//