Tamil Nadu Police Benevolent Fund

தமிழ்நாடு காவலர் சேமநல நிதி திட்டம்

  • தமிழ்நாடு அரசு 1957-ம் ஆண்டு காவல் துறையில், அரசிதழ் பதிவு பெறாத காவல் பணியாளர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் நலனுக்காக, அரசாணை (நிலை) எண்.1097, உள்துறை கருணைக் கொடைத் திட்டம் நாள் 23.04.1957-ன் படி தமிழ்நாடு காவலர் சேம நல நிதி திட்டம் உருவாக்கப்பட்டது .
  • தமிழ்நாடு காவலர் சேம நல நிதி அரசிதழ் பதிவு பெறாத காவல் பணியாளர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் தேவைகளை நிறைவேற்றுதற்காக உருவாக்கப்பட்டது .
  • இத்திட்டம் துவங்கப்பட்ட போது அரசு மானியமாக ரூ.50,000 வழங்கப்பட்டது. தற்சமயம் ரூ.1.2 கோடியாக உயர்த்தப்பட்டு 2018 முதல் வழங்கப்படுகிறது.
  • இதற்கான நிதியம் அரசு மானியத்திலிருந்தும், பயனாளர்களின் சந்தா மற்றும் உறுப்பினர்களின் நன்கொடையிலிருந்தும் உருவாக்கப்பகிறது .
  • அரசிதழ் பதிவு பெறாத காவலர் முதல் ஆய்வாளர்கள் வரை மற்றும் அலுவலக கண்காணிப்பாளர்கள் வரை இதன் பயனாளர்கள் ஆவார்.
  • தமிழ்நாடு காவலர் சேம நல நிதியம் 74 மாவட்டக் குழுக்களை கொண்டுள்ளது .
  • மாவட்ட குழுக்களின் கணக்குகளை மத்திய குழு கண்காணிக்கிறது .
  • மத்திய குழு தலைவராக காவல்துறை தலைமை இயக்குநர் பொறுப்பு வகிக்கிறார் .
  • மாவட்ட குழு தலைவராக காவல் கண்காணிப்பாளர்/தளவாய்/காவல் ஆணையாளர் பொறுப்பு வகிக்கிறனர் .
  • இதற்கான உறுப்பினர் என்பது சுய விருப்பம் சார்ந்ததாகும், அரசிதழ் பதிவு பெறாத (காவல் ஆளிநர்கள்/அமைச்சுப் பணியாளர்கள் ) காவலர் ஆய்வாளர்கள் மற்றும் அலுவலல் கண்காணிப்பாளர்கள் மட்டுமே பயனாளர்கள் ஆவார்.
  • இரண்டு தவணைகள் தொடச்சியாக செலுத்தாத சந்தாதாரர் உறுப்பினராக நீடிக்க இயலாது. நிலுவையில் உள்ள சந்தாத தொகையை செலுத்தி திரும்ப சந்தாதாரர்களாக இணையலாம்.

தமிழ்நாடு காவலர் சேம நல நிதியிலிருந்து வழங்கப்படுகிறது

வ.எண் திட்டம் தொகை
1 சந்தாதாரர் இறக்க நேரிட்டால் ரூ.50,000/-
2 சந்தாதாரர் பெற்றோர் இறக்க நேரிட்டால் ரூ.10,000/-
3 மறைந்த காவல் ஆளிநர் பிள்ளைகளுக்கு கல்வி உதவிதொகை(1 முதல் 12-ம் வகுப்பு வரை) ரூ.12,000/-
4 உயர் கல்விக்கு இளங்கலை பட்டப்படிப்பு ரூ.20,000/-
5 நூற்றாண்டு கல்வி உதவி தொகை ரூ.12,000/- முதல் ரூ.20,000/-
6 சிறப்பு மருத்து உதவி தொகை மாவட்ட அளவில் மூன்று முறை வழங்கப்படுகிறது ரூ.25,000/-
7 சிறப்பு மருத்து உதவி தொகை உயிர் காக்கும் மருத்துவ சிகிச்சைக்கு ரூ.5 லட்சம்

கல்வி உதவித்தொகை

  • இத்திட்டம் 2010-ல் தொடங்கப்பட்டது. சந்தாதாரர் இறக்கும்பட்சத்தில் அவரது வாரிசுகள் கல்வியை தொடர்வதற்கு உதவும் கல்வி உதவி திட்டமாகும்.
1 மறைந்த காவல் ஆளிநர் பிள்ளைகளுக்கு கல்வி உதவிதொகை (1 முதல் 12-ம் வகுப்பு வரை) ரூ.12,000/-
2 மறைந்த காவல் ஆளிநர் பிள்ளைகளுக்குக் கல்வி உதவித்தொகை (உயர் கல்விக்கு இளங்கலை பட்டப்படிப்பு ) ரூ.20,000/-

வருடாந்திர அரசு விருது மானிய திட்டங்கள் பரிசு மற்றும் விருதுகள்

  • அரசாணை (பத்தாண்டு) எண்.837 உள் (காவல்.9) துறை, நாள்.18.07.2008 ன் படி காவலர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்களின் குழந்தைகளில் 10 மற்றும் 12 வகுப்புகளில் முதல் 10 நிலைகளுக்கு தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ஒவ்வொரு மாவட்ட/மாநகர அளவில் வருடம் தோறும் வழங்கப்படுகிறது .
வகுப்பு 1-ம் பரிசு 2-ம் பரிசு 3-ம் பரிசு 4 முதல் 10 பரிசு
10 ரூ.6,500/- ரூ.4,500/- ரூ.2,500/ ரூ.2,000/-
12 ரூ.7,500/- ரூ.5,500/- ரூ.3,500/ ரூ.2,500/-
  • 2022 கல்வியாண்டில் காவலர் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுகள் 342 பேருக்கு ரூ.12.23 லட்சம் வழங்கப்பட்டது .

காவலர்களின் குழந்தைககளுக்கான தமிழ்நாடு அரசின் சிறப்பு கல்வி உதவி மற்றும் விருது

  • இத்திட்டம் அரசாணை எண் 311 உள் (காவல்.9) துறை, நாள்.17.03.1994-ன்படி காவல்துறை பணியாளர்கள்/அமைச்சுப் பணியாளர்கள் குழந்தைகளுக்கு உயர் கல்விக்கென சிறப்பு கல்வி உதவித் தொகையை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. இத்திட்டத்தின்படி, பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் முதல் 100 மாணவ, மாணவியருக்கு தலா ரூபாய் 25,000/- (அல்லது) கல்வி நிறுவனங்களில் செலுத்தப்படும் சரியான கட்டணம், இவற்றில் எது குறைவானதோ, அத்தொகையானது நான்காண்டு காலத்திற்கு அல்லது அப்படிப்பு முடியும் வரை தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
  • தமிழ்நாடு அரசு இதற்கான மானியத் தொகையினை அரசாணை எண்.288 உள் காவல் 9 துறை நாள்.03.04.2012 மூலமாக 1.2 கோடியாக உயர்த்தியுள்ளது .

கருணைத் தொகை

  • இத்திட்டம் தமிழ்நாடு அரசு ஆணை எண் 484 உள்துறை நாள்.17.03.1992 மூலமாக பணியிலிருக்கும் போது, கொல்லப்பட்ட/ஊனமாக்கப்பட்ட/காயமடைந்த காவலர்கள் அல்லது அவரது வாரிசுகளுக்கு துன்பம் மற்றும் இழப்புகளை ஈடுக்கட்டும் விதமாக ரூ.20,000 முதல் ரூ.15 லட்சம் வரைவழங்கப்படுகிறது.
  • 2022-2023 நிதியாண்டியிலிருந்து 166 காவலர்களுக்கு மொத்தமாக ரூ. 40,60,000 இத்திட்டத்தில் கீழ்கண்டவாறு வழங்கப்பட்டுள்ளது .
  • மருத்துவ காரணங்களுக்காக 3 காவலர்களுக்கு 8 லட்சம் வழங்கப்பட்டது.
  • சிறு காயங்களுக்கு 163 காவலருக்கு 32,60,000 வழங்கப்பட்டது .

தமிழ் நாடு காவலர் காப்பீட்டுத் திட்டம்

  • அரசு ஆணை எண்.1160 உள்(காவல் 11) துறை நாள் 18.08.1999-ன் படி காவல் பணியாளர்கள் பணியின் போது இறந்தாலோ, அல்லது நிரந்தர காயமடைந்தாலோ, இழப்பீட்டுத் தொகை கீழ்கண்டவாறு வழங்கப்படுகிறது.
வ. எண் பதவி இறக்க நேர்ந்தால் நிரந்தர / பகுதி ஊனம் நேர்ந்தால்
1 காவலர் முதல் ஆய்வாளர் வரை (PC to Inspector of Police) ரூ.4 லட்சம் (4 lakhs) ஊனத்தின் விகிதத்திற்கு ஏற்ப (% of disablement)
2 காவல் துணை கண்காணிப்பாளர் முதல் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் வரை (DSP To ASP) ரூ.8 லட்சம் (8 lakhs)
3 காவல் கண்காணிப்பாளர் முதல் காவல் துறை தலைவர் வரை (SP to IGP) ரூ.10 லட்சம் (10 lakhs)
4 கூடுதல் காவல் துறை இயக்குநர் (ADGP) ரூ.15 லட்சம் (15 lakhs)
5 காவல் துறை இயக்குநர் (DGP) ரூ.20 லட்சம் (20 lakhs)
  • ஒவ்வொரு ஆண்டிலும் அரசு ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்கிறது. 2022-2023-ம் ஆண்டில் வழங்கப்பட்ட மொத்தம் 11 பயணாளிகளுக்கு ரூ.23,00,000/- வழங்கப்பட்டுள்ளது.

காவலர்கள் மற்றும் பொதுமக்களுடான உறவு மேம்படுத்துதல் பயிற்சி

  • காவர்கள் மற்றும் பொதுமக்களுடான உறவு மேம்படுத்த துறை மற்றும் பொது உறவை மேம்படுத்த, 1,20,000 காவலர்களுக்கு பயிற்சினை அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி மூலமாக வழங்க அரசு அறிவித்துள்ளது .
  • G.O.(Ms) No.540, உள்துறை (Pol.IX), தேதி.30.11.2021 இல் ரூ.10 கோடிக்கு நிர்வாக அனுமதியும், 2021 ஆம் ஆண்டிற்கான ரூ.2.70 கோடி நிதியும் வழங்கப்பட்டுள்ளது.
  • இயக்குநர் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி அவர்களின் கடித நாள்.15.12.2022-ல் அவர்களால் ஐந்து முன்னோடி பயிற்சி (Pilot) நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றும், மேலும் அவர்கள் ஏற்கனவே குறைந்த பணியாளர்களைக் கொண்டு அதிக சுமையுடன் இருப்பதாகவும், மிகப்பெரிய எண்ணிக்கையிலான காவல்துறையினருக்கான பயிற்சித் திட்டங்களைக் கையாள்வது சாத்தியமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அதன்படி, 22.12.2022 அன்று தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் மற்றும் காவல்துறைத் தலைவர் ஆகியோரால் கூட்டம் கூட்டப்பட்டு, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் முதுநிலைப் பயிற்சியாளர்களுக்கான பைலட் பயிற்சித் திட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. மேலும் அன்பான அனுகுமுறை என்ற பெயரில் பைலட் பயிற்சி முடித்த காவல் ஆளிநர்களை கொண்டு மீதமுள்ள காவலர் ஆளிநர்களுக்கு பயிற்சினை காவலர் பயிற்சி பள்ளியின் மூலம் நடத்தப்படும் என முடிவெடிக்கப்பட்டுள்ளது.
  • அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் 09.02.2023 பைலட் பயிற்சித் திட்டம் தொடங்கப்பட்டு ஐந்து தொகுதியாக நடைபெறுகின்றது .

காவலர் பொதுப்பள்ளி

  • அரசு நிலையாணை எண்.944 உள்(காவல்.10) மூலமாக உண்டு உறைவிட காவலர் பொதுப்ள்ளி ஒன்று மேலக்கோட்டையூரில் தொடங்குவதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது. ”உங்கள் சொந்த இல்லம்” என்ற திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு தாலூக்கா, மேலக்கோட்டையூரில் குடியிருந்து வரும் காவலர் குடும்பங்களின் நலனுக்காகவும் இத்திட்டம் செயல்படுத்தப்பபட்டது இத்திட்டத்திற்காக ரூபாய் 51 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 50% இடங்கள் காவலர்கள் வாரிசுக்காகவும், 50% இடங்கள் பொது மக்களுக்காகவும் ஒதுக்கப்படும்.
  • 2018-2019 கல்வி ஆண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரையில் 50 மாணவ/மாணவிகள் தற்காலிகமாக (தமிழ்நாடு காவலர் உயர்பயிற்சியகம் ஊணமாஞ்சேரி காஞ்சிபுரம் மாவட்டத்தில்) காவலர் பொது பள்ளியில் பயின்று வந்தனர். 2019-2020 கல்வி ஆண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் 65 மாணவ/மாணவிகள் கல்வி பயின்று வந்தனர். 2020-2021 கல்வி ஆண்டில் பதிதாக 40 மாணவ/மாணவிகள் சேந்துள்ளனர் ஆக மொத்தம் இந்த ஆண்டில் 105 மாணவ/மாணவிகள் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் பயின்று வருகின்றனர். தற்போது வரையில் எந்த ஒரு கல்வி கட்டணம் பெறப்படவில்லை.
  • அரசு ஆணை எண்.122 உள்(காவல் 9) துறை நாள் 24.02.2021-ன் படி காவலர் பொதுப்பள்ளியின் மேலாண்மை மற்றும் நிர்வாகத்தினை அவுட்சோர்ஸ் செய்ய காவல்துறை இயக்குநர் அவர்களுக்கு அனுமதி அளிக்கபட்டது தற்போழுது கைவிடப்பட்டு, காவலர் பொதுப்பள்ளினை மாதிரி பள்ளி G.O. (Ms). No.138 School Education(SSA1) Department, dated 08.08.2022, மற்றும் சிறப்பு பள்ளி G.O.(Ms) No. 149 School Education (SSA1) Dated 04.09.2022 முறையில் நடத்துவதற்கு பள்ளி கல்விதுறையிடம் வழங்க அரசுக்கு முன்மொழிவு 11.01.2023 அன்று அனுப்பட்டுள்ளது.
//