Police Welfare

காவலர் வேலைவாய்ப்பு மையம்

  • தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் நமது காவல்துறையில் பணியாற்றும் காவல் ஆளுநர்கள் மற்றும் அமைச்சப் பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்தம் வாரிசுகள் மற்றும் துணைவியர்களுக்குத் தனியார் துறையில் வேலை வாய்ப்பு பெற்றிட உதவும் வiகயில் தலைமை அலுவலகத்தில் காவலர் வேலைவாய்ப்பு மையம் எனும் தனிப்பிரிவை உருவாக்கியுள்ளார்.
  • தகவல் தொழில்நுட்பத் துறை, தனியார் மற்றும் பெறு நிறுவனங்களில் (கார்ப்பரேட்) வேலை தேடுபவர்களுக்கும் மற்றும் திறன் மேம்படுத்த முனைவோருக்கும் உதவி செய்வதே இதன் முக்கிய குறிக்கோள் ஆகும்.
  • கடந்த 2021-ம் ஆண்டு வேலைவாய்ப்பு கோரி மொத்தம் 6100 (4200 manual + 1900 online) விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
  • சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் வேலூர் ஆகிய 5 இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அதில் 230 நிறுவனங்கள் பங்கேற்றன.
  • 4009 நபர்கள் கலந்து கொண்டனர், அதில் 1054 நபர்கள் தேர்வு பெற்று பணிநியமனம் ஆணைகள் வழங்கப்பட்டன. 672 நபர்கள் பணியில் சேர்ந்தனர்.
  • நடப்பாண்டிற்கான விண்ணப்பங்கள் Google form மூலம் இணையத்தில் விண்ணப்பிக்கத் தலைமை அலுவலக குறிப்பாணை மூலம் கேட்டுக்கொள்ளப்பட்டது.அனைத்து காவல் அதிகாரிகளும் விண்ணப்பதார்கள் விண்ணப்பிக்க ஏதுவாக வாரிசு மற்றும் துணைவியர் விபரங்களைச் சரிபார்த்து சான்றிதழ் வழங்கக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
  • தமிழ்நாடு காவலன் நலன் என்ற பெயரில் தனி இணையதளம் மற்றும் கைப்பேசி செயலி உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
  • வேலைவாய்ப்பு முகாம் நடத்துவது தொடர்பான முதன்மை கூட்டம் 06.02.2023 அன்று தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
  • சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், வேலூர் மற்றும் ஓசூர் ஆகிய 6 இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் மார்ச் – 2023 நடத்தப்பட்டு 613 நபர்களுக்கு பணிநியமனம் ஆணைகள் வழங்கப்பட்டன.
//