Police Welfare

தமிழ்நாடு காவல் அங்காடிகள்

  • காவலர் நல அங்காடிகள் தமிழ்நாடு அரசாணை எண். 125 (உள்) காவல் 13, நாள் 21.02.2022ன் படி உருவாக்கப்பட்டது .
  • தமிழக அரசு சார்பில் 56 காவலர் அலகு அங்காடிகள் மற்றும் 7 கண்காணிப்பு அங்காடிகள் துவங்கப்பட்டுள்ளன.
  • தமிழ்நாடு காவல் அங்காடியில் காவல்துறையைச் சேர்ந்த அலுவலர்கள் மற்றும் அமைச்ச பணியாளர்கள், சிறைத்துறை, தீயணைப ்பு மற்றும் வனத்துறையில் பணிபுரியும் சீருடை அலுவலர்கள் பயனாளர்கள் ஆவர்.
  • காவல்துறையைச் சேர்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், சிறைத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை மற்றும் வனத்துறையில் பணிபுரியும் சீருடை அலுவலர்கள், ஓய்வு பெற்ற அலுவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுமாக மொத்தம் 180550 ( காவல் துறை – 158044, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை – 8786, சிறைத்துறை – 5878, வனத்துறை – 7842) பயனாளிகள் தமிழ்நாடு காவல் அங்காடியில் சேர்ந்து பயனடைந்து வருகின்றனர்.
  • நுகர்வோர் பொருட்கள்/வீட்டு உபயோக பொருட்கள்/மின்னனு மற்றும் மின்சாதனம், மளிகை பொருட்கள் உள்ளிட்ட 10,000 பொருட்கள் குறைந்த விலையில் பயனாளருக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
  • தமிழ்நாடு அரசு அரசாணை எண் 125 உள் காவல் 13 நாள் 21.02.2011 மூலமாகத் தமிழ்நாடு காவலர் அங்காடி வழங்கப்படும் பொருட்கள் 14.5 சதவீதம் மதிப்புக் கூட்டு வரி ரத்து செய்யப்பட்டதால் அந்த பயன் காவல் துறை பயனாளிகளைச் செ ன்றடைந்தது.
  • சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கப்பட்ட 01.07.2017 முதல் வரி விலக்கு வழங்கப்படவில்லை. நிறுவனங்களால் வழங்கப்படும் தள்ளுபடி மட்டுமே பயனாளிகளுக்கு கிடைக்கிறது.
  • மத்திய பாதுகாப்பு படைகள் அங்காடிகளில் விற்கப்படும் பொருட்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரியில் 50 சதவீதம் தள்ளுபடி மத்திய அரசால் வழங்கப்படுகிறது. இதே சலுகை தமிழ்நாடு காவல்துறையால் நடத்தப்படும் காவலர் அங்காடிகளுக்கு வழங்கப்படுவதில்லை .
வருடாந்திர விற்பனை விவரம்
வருடம் மொத்த விற்பனை CGST SGST 50% SGST
2019-2020 28987485898.19 197712885.36 197712885.36 98856442
2020-2021 3624574919.80 232070736.95 232070736.95 116035360
2021-2022 4259334228.78 283974849.24 283974849.24 141987424
  • மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் 1.தென்காசி. 2.கள்ளக்குறிச்சி, 3.திருப்பத்தூர், 4. ராணிப்பேட்டை, 5.செங்கல்பட்டு மற்றும் 6.மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களில் காவலர் அங்காடிகள் தொடங்க அறிவிக்கப்பட்டு அரசாணை எண் 130 உள் காவல் 13 நாள்.04.03.2022 வெளியிடப்பட்டது. இதன் தொடர்பாக 6 புதிய காவலர் அங்காடிகள் 15.09.2022 அன்று தொடங்கப்பட்டுள்ளது.

காவல் அங்காடி செயலி

  • காவல் அங்காடியில் உள்ள பொருட்களின் இருப்பு நிலை, விலை போன்ற விவரங்கள் தெரிந்துகொள்ளக் காவல் அங்காடி செயலி மற்றும் www.tnpolicecanteen.com என்ற இணையதளம் துவங்கப்பட்டது.
  • கீழே உள்ள அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி காவல்துறை மற்றும் பிற துறைகளின் தொ டர்புடைய பதவிகளுக்கான தற்போதைய மாதாந்திர கொள்முதல் வரம்புகள் மற்றும் வருடாந்திர உச்சவரம்பு ஆகியவற்றை உயர்த்தப் பட்டுள்ளது.
பதவி தற்போதுள்ள மாதாந்திர உச்ச வரம்பு தற்போதுள்ள வருடாந்திர உச்ச வரம்பு மேம்படுத்தப்பட்ட/ திருத்தப்பட்ட மாதாந்திர உச்சவரம்பு மேம்படுத்தப்பட்ட/ திருத்தப்பட்ட வருடாந்திர உச்சவரம்பு
காவலர் முதல் தலைமை காவலர் வரை ரூ.7,500/- ரூ.1,00,000 ரூ.15,000/- ரூ.1,50,000/-
காவல் உதவி ஆய்வாளர் முதல் ஆய்வாளர் வரை ரூ.10,000/- ரூ.1,50,000/- ரூ.20,000/- ரூ.2,50,000/-
துணை காவல் கண்காணிப்பாளர் முதல் காவல் கண்காணிப்பளர் வரை ரூ.15,000/- ரூ.2,50,000/- ரூ.30,000/- ரூ.3,50,000/-
காவல் துறை துணைத்தலைவர் மற்றும் ஆதற்கு மேல் உள்ள காவல் அதிகாரிகள் ரூ.15,000/- ரூ.2,50,000/- ரூ.30,000/- ரூ.4,50,000/-
  • அதிக விலை மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்கள், மின்சாதனம் மற்றும் மின்னணு பொருட்களை நுகர்வோர் வாங்குவதற்கான காலத்தை இரண்டு ஆண்டுகளில் இருந்து ஒரு ஆண்டாக குறைக்கப்பட்டுள்ளது.
//